ஒரே நாளில் 2092 விதிமீறல் வழக்கு

திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2092 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொருட்டு நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது, அதிகவேகத்தில் சென்றதற்காக 19 வழக்குகள், அலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 241, சிக்னலில் விதி மீறியதற்காக 56, மது அருந்தி வாகனம் ஓட்டியதாக ஒரு வழக்கும் பதிவு செய்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியதாக 125, ெஹல்மேட் அணியாமல் சென்ற 919, சீட் பெல்ட் அணியாமல் சென்ற 731 என மொத்தம் 2092 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.