நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரையில் மத்திய அரசின் நுாறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது” என தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி குற்றம் சாட்டினார்.மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம், கருவனுார், பில்லுசேரி உட்பட பல பகுதிகளிலிருந்து அ.தி.மு.க,, தே.மு.தி.க., பா.ஜ., கட்சியினர் மூர்த்தி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மதுரையில் எந்த வளர்ச்சி திட்டமும் நடக்கவில்லை. கமிஷனுக்காக டெண்டர் மட்டும் விடப்படுகிறது. முதியோர் உதவித் தொகை, விதவை பென்ஷன் கிடைக்கவில்லை. நுாறு நாள் வேலை திட்டத்தில் உண்மையான பயனாளிக்கு வேலை கிடைக்கவில்லை. உரிய சம்பளம் வழங்காமல் முறைகேடு நடக்கிறது. மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (பிப்.,22) ஒன்றியம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் சைக்கிள் பேரணி நடக்கிறது என்றார்.