மதுரை விலங்கின பாதுகாப்பு பயிற்சி பட்டறை

மதுரை அரசு அருங்காட்சியகம் மற்றும் மதுரை கல்லுாரி சார்பில் விலங்கினங்கள் பாதுகாத்தல், பதப்படுத்துதல் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.உயிரியில் பொருட்களை பாதுகாத்து, பதப்படுத்துதல் குறித்து இளநிலை உயிரி தொழில்நுட்பவியல், முதுகலை நுண்ணியிரியல் துறை மாணவர்களுக்கு சென்னை அரசு அருங்காட்சியக விலங்கியல் பிரிவு தொழில்நுட்ப வல்லுனர்கள் பலராமன், பிச்சையா பயிற்சி அளித்தனர். நிறைவு விழாவில் எம்.பி., சு.வெங்கடேசன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.கல்லுாரி சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூரிய நாராயணன், முதல்வர் சுரேஷ், செயலாளர் நடன கோபால், பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், அருங்காட்சிய கமிஷனர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், காமராஜ் பல்கலை பேராசிரியர் ராஜேந்திரன், புவியியல் காப்பாட்சியர் தனலட்சுமி, பேராசிரியர் நாகசுந்தரபாண்டியன் பங்கேற்றனர். அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் நன்றி கூறினார்.

Tags: