மதுரை உசிலம்பட்டி அருகே மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஓடையில் நூறு நாள் வேலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, பிரவியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி, ஓடையில் கம்பியால் மண்ணைத் தோண்டிய போது அங்கு சிலை இருப்பதைக் கண்டார். தொடர்ந்து, அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம்  அவர் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனைவரும் சேர்ந்து சிலையைத் தோண்டி எடுத்து கொடிக்குளம் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமியிடம் ஒப்படைத்தனர். அவர் வாலாந்தூர் காவல் நிலையத்தில் சிலையை ஒப்படைத்தார். இதுபற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கண்டெடுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை (வெண்கல சிலை)  மார்பளவு அளவு உடைந்த நிலையில், சிலையின் உயரமானது 30 செ.மீ., அகலம் 25.5 செ.மீ., 4.400 கிலோ எனத் தெரிய வந்ததுள்ளது. 

கண்டெடுக்கப்பட் மீனாட்சி அம்மன் சிலை காவல் துறையினர் உதவியுடன் வருவாய் துறை அதிகாரிகள் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.