ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கேள்வி

‘மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த போது குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு பெற்ற தி.மு.க., தமிழகத்திற்கு திட்டங்களை பெறாதது ஏன்,’ என தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரூ.33.47 கோடியில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டி அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.விழாவில் அமைச்சர் பேசியதாவது: மக்களுக்கு ரயில்வே பாலம் வரப்பிரசாதமாக அமையும்.

தமிழகத்தில் 5 முறை ஆட்சி, 17 ஆண்டு மத்திய அரசில் அங்கம் என இருந்தும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர தி.மு.க., எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. மத்திய பட்ஜெட்டில் சாலை மேம்பாட்டிற்காக நிதியை முதல்வர் பழனிசாமி பெற்று தந்துள்ளார். நான்கு ஆண்டுகளில் 400 ஆண்டுகால வளர்ச்சி திட்டங்களை முதல்வர் பெற்று தந்துள்ளார். முதல்வர் என்ன திட்டங்களை வழங்கலாம் என தினமும் யோசித்து செயல்படுத்துகிறார். ஆனால் ஸ்டாலின் எப்படி குறை சொல்லலாம் என யோசித்துக்கொண்டே இருக்கிறார், என்றார்.கலெக்டர் அன்பழகன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேந்திரா தேவி, கண்ணன் முனீஸ்வரன், உமா,

தாசில்தார் முத்துப்பாண்டியன், அ.தி.மு.க., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், ஐ.டி.அணி., செயலாளர் சிங்கராஜபாண்டியன், ஒன்றிய தலைவர் லதா, மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் பங்கேற்றனர்.