புதிய ரேஷன் கடை கட்டிடம்: திமுக எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி அன்னை இந்திரா நகரில் புதிய ரேஷன் கடை கட்டிடத்துக்கு, திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் கோனேரிக்குப்பம் அன்னை இந்திரா நகரில் 2019-2020 எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹13.5 லட்சத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்ட, திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் அடிக்கல் நாட்டினார். உடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகரன், காஞ்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி, ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.