வேடசந்துாரில் திருடர்கள் கைது

.வேடசந்துார் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி பிரிவை சேர்ந்த லாரி உரிமையாளர் சேகர் 45. பிப்.15 ல் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 

வேடசந்தூர் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.அப்போது டிப்பர் லாரியில் வந்த ஈரோட்டை சேர்ந்த தாமோதரனை 22, பிடித்து விசாரித்தனர். அதில், கரூரை சேர்ந்த ரத்தினகிரீஸ்வரர் 24, குணசேகரன் 38, ஆகியோருடன் சேர்ந்து திருடியதும், மூவரும் திருச்சி சிறையில் நண்பர்களானதும் தெரிய வந்தது. இதன் பின் மூவரையும் கைது செய்து, 8.5 பவுன் நகை, திருட்டுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.