கழிவு நீா் கசிவால் தகராறு: ஒருவா் அடித்துக் கொலை

மதுரை கோச்சடை காலான் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (38). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜூ என்பவருக்கும் இடையே கழிவுநீா் கசிவு தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினா் சோ்ந்து முத்தையாவை தாக்கியுள்ளனா். அதில், தலையில் பலத்த காயமடைந்த முத்தையாவை, அப்பகுதியினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.