மதுரையில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்’

மதுரையில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் அறிவியல் கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டு விழா பேராசிரியர் தினகரன் தலைமையில் நடந்தது.காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் கட்டுரை தொகுப்பை வெளியிட்டு பேசுகையில், “பள்ளியில் இருந்தே மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி இதுபோன்ற அறிவியல் கட்டுரை தொகுப்புகளை தேடிச் சென்று படிக்கும் எண்ணத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்,” என்றார். பேராசிரியர்கள் ஷகிலா, ராஜமாணிக்கம், அறிவியல் இயக்க பொறுப்பாளர் அமலராஜன் கட்டுரை தொகுப்பை பெற்றனர்.டில்லி விஞ்ஞான் பிரசார், சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் பல பல்கலைகளில் இருந்தும் இணைய வழியில் வெளியிடப்பட்டன. ஆசிரியர்கள் காமேஷ் ஒருங்கிணைத்தார். நிர்வாகி கடசாரி நன்றி கூறினார்.