செல்வமகள் திட்டம்: 500 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தனது சொந்த செலவில் சேமிப்பு கணக்குகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.இத்திட்டத்தின் கீழ் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு, அமைச்சா் கடம்பூா் செ.

ராஜு தனது சொந்தச் செலவில் தலா ரூ. 250 வீதம், ரூ.1.25 லட்சம் செலுத்திருந்தாா். அதனையடுத்து அக்குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கி, அதற்கான கணக்கு புத்தகத்தை பெற்றோரிடம் திங்கள்கிழமை வழங்கும் விழா தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.